சமத்துவம்

“சமத்துவம்” என்பதே மருத்துவத்திலிருந்து தோன்றியது தானோ என்னவோ?

இனம் என்ன? குலமென்ன? குணமென்ன? தேவையில்லை! உயர்வு, தாழ்வு என்று ஏதுமில்லை!

நோயென்று நாடி வருவோரை, தாய் என காத்து, பயத்துடன் ஓடி வருவோரை, நயத்துடன் சிகிச்சை பார்த்து, நம்பி கை நீட்டுவோரை , நம்பிக்கை கொள்ள வைத்து,

மாத்திரைகளுடன் அன்பு வார்த்தைகள் பேசி, வலி தெரியாமல் போட்டு, ‘ஊசி’,

அப்பப்பா! இன்னும் என்னென்ன சொல்ல?

கண்ணுக்குத் தெரியாதவன் அந்த ‘இறைவன்’ ! கண் கண்ட தெய்வமாம், மருத்துவம் பார்க்கும் இந்த ‘புனிதன்’.!

அதுவும் இந்தக் ‘ கொடிய கொரானா’ காலத்தில்?

கால நேரம் பாராமல், காலனை எதிர்த்து மனம் சோராமல்,

மனித இனத்தை காக்க, நோய் ஏதிர்ப்பு சக்தியை அவர் உடம்பில் சேர்க்க,

அரும்பாடு பட்டனர், சிலர் தம் உடல் நலமே கெட்டனர்.

துன்பம் அல்ல ஒரு பொருட்டு , விலக வேண்டும் கொரானா எனும் ‘ கொடிய இருட்டு’.

என அயராது பணியாற்றுகிறீர்கள்,

மகத்தான உம் சேவையை என்ன சொல்லி வாழ்த்த ?

வேண்டுகிறோம் இறைவனை பணிவோடு, விரைவில் வந்து விடுவார் கனிவோடு, மென்மேலும் உம்மை உயர்த்த அருளோடு!.

“வாழ்க மருத்துவ பணி வளர்க காவேரியின் பணி”

Balasubramani Physiotherapist, Kauvery Hospital, Salem