GK. Balasubramani,

Senior Physiotherapist, Kauvery Hospital, Salem

Correspondence: Email: gkbalasubramani027@gmail.com

GK. Balasubramani

“உயிரைக்காக்கும் உயரியதானம்”

நம் அனைவருக்கும் என்ன பந்தம்?

நாம் ஆகிடலாம் இரத்த சொந்தம்

உறவுகளாய் வாழ்ந்தால் மட்டும்

இரத்த சொந்தம் ஆகிடுமா?

இரத்தம் தானம் தந்து வாழ்ந்துவந்தால்

நாம் இரத்தசொந்தம் ஆகிடலாம்

உடல் உறுப்பு தானம் தந்தால்

இறந்தபின்னும் வாழ்ந்திடலாம் என்றும்

வாழும்போதே மனிதனாய் வாழ்ந்தஇன்பம்

இரத்த தானத்தால் தான் சாத்தியமே

சாவின் அருகில் சென்று திரும்பியவன்

நம்மை தெய்வமாக கும்பிடுவான் !

ஊர்பெயரும் யாதென அறியாதவன்

உன்னை உளமார வாழ்த்திடுவான்…..

உறைந்து போகும் இரத்தம் கூட

உயிரோட்டம் பெற்றிடுமே !

உரியவருக்கு நீயும் தந்தால்

அவர் உயிர்தந்து காத்திடுமே…..

பதினெண் அகவை தாண்டிவிட்டால்

நாற்பத்து ஐந்து மேல் உடல் எடையிருந்தால்

இரத்தம் தானமாக தந்திடலாம் அந்த

எமனையும் இதனால் வென்றிடலாம் ….

உடல்நிலை உன்னில் உன்னதமாயிருந்தால்

உடனே இரத்தம் தந்திடலாம்,

மூன்று மாத இடைவெளியில்

முழுமனதாய் இரத்தம் தந்தால் மீண்டும் ஊரிடுமே …..

புதிய ரத்தம் ஊற்றெடுத்து உடல்

புத்துணர்ச்சி நம் வாழ்நாளில் ….

இரத்தத்திற்கு விலை பேசி

அதை வியாபாரம் ஆக்கிடாமல்,

தானமாக நாமும் தந்து

தரணி போற்ற தனித்து நிற்போம் !

பணத்தை தானம் தர மனம் தயங்கினாலும்

இரத்தம் தானம் தர வீண் தயக்கம் வேண்டாம் …

இரத்த தானத்தில் தனி புகழிடம்

தாய் தமிழகத்துக்கே இன்று முதலிடம்,

இந்த இடம் நிலைத்திருக்க

உறுதிகொள்வோம் இந்நாளில் .

தாய் தந்த நம் உயிரை – நாமும்

இரத்ததானம் தந்து தாயாவோம்.