Categories: Tamil Articles

கோவிட்- நம்பிக்கையும் அரவணைப்பும் வேண்டும்

டாக்டர் சுரேஷ் வெங்கிடா, மருத்துவ இயக்குனர் (குழுமம்), காவேரி மருத்துவமனை  

தனிப்பட்ட நோய்க்கு மருத்துவம் என்றில்லாமல் ஒருவரின் மொத்த உடல் மற்றும் மன நலத்தைப் பேண வேண்டும். நோயாளியை அரவணைப்புடன் நடத்தி, அவரின் உணர்வுகளையும் தேவைகளையும் புரிந்துகொண்டு, அவருக்கு வேண்டிய பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும்.

இதெல்லாம் ஆரம்பித்து ஏறக்குறைய ஒரு வருடம் ஆகிவிட்டது, இருப்பினும் கோவிட்-19’ன் வடுக்களும், எதிர்காலம் குறித்த அச்சமும் நம்மை வாட்டி வதைத்துக்கொண்டுதான் இருக்கின்றன. கோவிட்-க்கு பிந்தைய தாக்கமும், நீண்ட கால கோவிட் (Long COVID) பாதிப்பும் நோயாளிகளுக்கு பெரும் தொந்தரவாக இருக்கின்றன. பெருந்தொற்றுகள் குறித்த அனுபவம் வாய்ந்த மூத்த மருத்துவ நிபுணரும், காவேரி மருத்துவமனைக் குழுமத்தின் மருத்துவ இயக்குனருமான டாக்டர் வேங்கிடா எஸ். சுரேஷ், (MBBS, MD, D.Card (Lon)) கோவிட் குறித்த பல செய்திகளைப் பகிர்ந்துகொள்கிறார்…

நோயெதிர்ப்பு சக்தி என்றால் என்ன? கோவிட்-19-ஐப் பொறுத்தவரை அதன் முக்கியத்துவம் என்ன?

நம் உடலின் இயற்கையான நோய் தடுப்பு செயல்முறைதான் நோயெதிர்ப்பு சக்தி. பி.செல்ஸ் உற்பத்தி செய்யும் ‘காமா குலோபுளின்ஸ்’ மற்றும் டி.செல்ஸ் இதற்கு உதவுகின்றன. நோயெதிர்ப்பு சக்திதான் நம் உடலின் மிலிட்டரி, ஏர் ஃபோர்ஸ் எல்லாமே. இங்கே வெள்ளை ரத்த அணுக்கள் காலாட்படை போல செயல்படுகின்றன.

சில சமயம் உள்கட்சி போராட்டம் போல நம் நோயெதிர்ப்பு சக்தியே நமக்கு எதிராகவும் செயல்படக்கூடும். கோவிட் ஏற்படுத்தும் அதீத வீக்கம் என்பது இந்த வகையைச் சாரும். நம் நோயெதிர்ப்பு சக்தியின் எதிர்மறையான வினையை ‘ஆட்டோ இம்யூனிட்டி’ என்கிறோம், நீண்ட கால கோவிட் பாதிப்பிற்கு இது காரணமாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

கோவிட்-டிற்குப் பிந்தைய பாதிப்புகள் என்னென்ன?

கோவிட் தாக்கும்போது சுவாச மண்டலமும் நுரையீரலும் பாதிப்படைகின்றன. இருப்பினும் மூளை, இதயம், சிறுநீரகம், கல்லீரல், கணையம், குடல், ரத்தம் மற்றும் மனம் என அனைத்திலும் இது பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பதே உண்மை.

புற்றுநோய், நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோய், உடல் பருமன் போன்ற உடல் உபாதை கொண்டவர்களை கோவிட் கடுமையாக பாதிக்கின்றது. கோவிட் பாதிப்பிலிருந்து மீண்டாலும், இவ்வாறான நோயாளிகளுக்கு தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பு தேவைப்படுகிறது.

‘நீண்ட கால கோவிட்’ (Long COVID) என்றால் என்ன?

கொரோனாவின் தேவையில்லாத அன்பளிப்புதான் இந்த நீண்ட கால கோவிட். சிலருக்கு கோவிட் பாதித்தாலும் அறிகுறிகள் இருப்பதில்லை, சிலருக்குக் காய்ச்சலும், பிற பாதிப்புகளும் குறைவாகவே இருக்கும், சிலரோ வெகு விரைவில் குணமடைவதுண்டு. இருப்பினும் வேறு பல பாதிப்புகள், இவர்களின் உடலைத் தொடர்ந்து வாட்டுவதைக் காண முடிகிறது. இதையே கோவிட்-டின் நீண்ட காலத் தாக்கம் என்கிறோம்.

இவர்களுக்கு இருமல், மெல்லிய காய்ச்சல், உடல் வலி மற்றும் சோர்வு போன்றவை மீண்டும் மீண்டும் வருவதைக் காணமுடிகிறது. மூச்சு விடுவதில் சிரமம், படபடப்பு, நெஞ்சு வலி, தலைவலி, மூளை மந்தமடைதல், தசை வலி மற்றும் பலவீனம், பசியின்மை, மலச்சிக்கல் அல்லது பேதி, தோலில் தடிப்புகள், எலும்பில் வலி, மூட்டில் வீக்கம், ரத்தம் உறைதல் மற்றும் ரத்தப்பெருக்கில் பிரச்னை, பதற்றம், தூக்கமின்மை, மன அழுத்தம் எனப் பல்வேறு பாதிப்புகள் கோவிட்-டிற்குப் பின் வருவதைக் காண முடிகிறது.

உடலின் நோயெதிர்ப்பு சக்தி குறைவு, உடலின் நோயெதிர்ப்பு எதிர்வினைகள், உடலின் செயல்திறன் குறைவு, அல்லது நோயால் ஏற்பட்டுள்ள மன உளைச்சல் போன்றவை இதற்குக் காரணமாக இருக்கலாம்.

இவர்களுக்கான தீர்வுதான் என்ன?

நிபுணர்களின் ஆலோசனையும் சேவையும் இவர்களுக்குத் தேவை. தனிப்பட்ட நோய்க்கு மருத்துவம் என்றில்லாமல் ஒருவரின் மொத்த உடல் மற்றும் மன நலத்தைப் பேண வேண்டும். நோயாளியை அரவணைப்புடன் நடத்தி, அவரின் உணர்வுகளையும் தேவைகளையும் புரிந்துகொண்டு, அவருக்கு வேண்டிய பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். அவரின் உடல் நிலை, மன நிலை மற்றும் சிகிச்சை குறித்து குடும்பத்தினரிடம் கலந்தாலோசிப்பது அவசியம்.

காவேரி மருத்துவமனையின் ‘போஸ்ட்-கோவிட் வெல்னஸ் கிளினிக்ஸ்’ (Post COVID Wellness Clinics) நோயாளிகளுக்குப் பரிவான, பாசமான சேவையுடன் கூடிய சிகிச்சையை வழங்குகின்றன. இதனால் நோயாளிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் வாழ்கையின் மீது புது நம்பிக்கை பிறப்பதைக் காண முடிகிறது. பரிபூரணமாக குணமடையும் வரை இந்தப் பயணத்தில் உங்களுடன் கைக்கோத்து நடக்கிறோம்.


மேலும் படிக்க: கோவிட் -19 உடன் எனது அனுபவம்


கோவிட் வரமால் இருக்க என்னென்ன செய்யலாம்?

கோவிட்-டின் முதல் அலை வந்தபோது என்ன செய்தோமோ, அதையே பின்பற்றுங்கள்… முகக்கவசம், சானிடைசர், சர்ஃபேஸ் டிசின்ஃபெக்டன்ட், இவையெல்லாம் கட்டாயமானவை. கூட்டத்தைத் தவிர்த்தால் ‘இரண்டாம் அலை’யைத் தடுக்கலாம். பொது சுகாதார நடவடிக்கைகள், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் தடுப்பு மருந்துகளால் கோவிட்-டை நாம் நிச்சயம் வெல்லலாம்!


டாக்டர் சுரேஷ் வெங்கிடா,
மருத்துவ இயக்குனர் (குழுமம்),
காவேரி மருத்துவமனை  

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai, Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.

Chennai – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801

Recent Posts

Mitra-clip procedure for Mitral Valve Regurgitation

Summary Mitral Valve is an important valve in the human heart and like any other…

1 week ago

Significance of Ventricular Assist Devices in Cardiac Support

Table of Content Introduction What are Ventricular Assist Devices Why are they required? Types of…

1 week ago

All about Thunderclap Headaches

Table of Content Introduction Types Causes Triggers Symptoms Diagnosis Treatment Summary Thunderclap headaches are a…

2 weeks ago

Hypertension in Children

Summary Hypertension in children is on the rise. It is usually caused due to kidney…

2 weeks ago

Cough with blood in mucus – Hemoptysis: Causes and Treatment

Summary Hemoptysis is a condition in which the person coughs up blood in small to…

2 weeks ago

Dos and Don’ts for Snake Bites – FAQs

Table of Content Snake Bites – Everything you need to know in a nutshell What…

2 weeks ago