Categories: Tamil Articles

மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி மகிழ்ச்சியாக வாழுங்கள்!

மோஃ என்பது தாதுக்களின் வலிமையை அளவீடு செய்யும் ஒரு அளவுகோல். பத்து வரை அளவு கொண்ட இந்த மோஃ அளவீட்டில், பத்து வலிமை மதிப்பெண் உள்ள ஒரு பொருள் வைரம். இந்த வைரங்களுமே  பத்து மோஃவுக்கு அதிகமான அழுத்தம் கொடுத்தால் நொறுங்கி விடும். வைரங்களுக்கே அழுத்தம் பொறுக்க முடிய வில்லை என்ற நிலையில் மிருதுவான மனித மனத்துக்கு?

மன அழுத்தம், உலக சுகாதார அமைப்பின் படி 10% மக்களை பாதிக்கக்கூடிய ஒரு நோய். உலக மக்கள்தொகையில் 80 கோடி மக்களை தாக்கும் ஒரு பிரச்னை. அதாவது பத்தில் ஒரு நபர் நமக்கு தெரிந்தவரில் இந்த நோயால் பாதிக்க பட்டிருப்பார். பிற நோய்களை போன்று அதிக அக்கறையோ, மருத்துவரை அணுகும் குணமோ அதிகம் இல்லாத ஒரு பிணி.

மனம், இதன் இடத்தை மூளையின் ஒரு பகுதிக்குள் ஒதுக்கிவிட முடியாது. ஹிப்போகாம்பஸ் என்னும் பகுதியில்  இது இருப்பதாகவும், பேசல் காங்கிலியாவின் நியூரான் பின்னல்களுக்குள் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் அனுமானிக்கின்றர்கள். இந்த இடம் தெரியாத மனதுக்கு ஏற்படும் பிரச்னைகளுள் தலையாயது மன அழுத்தம்.

இடமே நிலையற்ற ஒரு பொருளுக்கு அழுத்தமா என்றும் இடம் இல்லாத ஒரு பொருளுக்கு எப்படி நோய்  வரும் என்றும் நாம் அனைவரும்  சிந்திக்கலாம். நாம் வாழ்வில் அன்றாடம் பார்த்து வரும் சம்பவங்கள், கற்றுவரும் செய்திகள், பயின்று வரும் தொழில்கள், பழகி வரும் மனிதர்கள்… இவை அனைத்தும் சேர்ந்தே நம் சிந்தனைகளை வடிவமைக்கின்றன. இப்படி பல ஆதிக்கங்களால் வடிவமைக்கப்படும் நமது மனத்தில், மேற்கண்ட ஏதேனும் ஒரு  காரணத்தினால் மன அழுத்தம் ஏற்படலாம். காரணம் இன்றியும் மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பும் கூட சில நபர்களுக்கு உள்ளது.

மன அழுத்தம் ஏற்பட்ட ஒரு நபருக்கு, வேலை செய்வதில் வெறுப்பு, இயங்குவதில் வெறுப்பு, துக்கமின்மை, அதிக துக்கம், பசி இன்மை, அதிக பசி, வாழ்வில் பிடித்தம் இன்மை, உந்துதல் இன்றி இருத்தல், தாம்பத்தியத்தில் இஷ்டம் இன்மை, சக மனிதர்கள் மீது வெறுப்பு, வாழ்வில் நம்பிக்கை இன்மை என்று பல மாதிரியாக தோற்றுவிக்கும்.

சிலருக்கு இதில் high functioning depressive எனப்படும், ‘அதிக செயல்பாடுடன் மன அழுத்தம்’ ஏற்படும், இவர்கள் தங்களின் தினசரி வேலைகளை சரியாக நிறைவேற்றுவார்கள். எனினும், தினசரி வேலைகளைச் செய்யவே அவர்களுக்கு சாதாரண மனிதர்களை விட அதிக ஆற்றல் தேவைப்படும். அவர்கள் மனம் அவர்களை அதிக களைப்புக்கு உள்ளாக்கும். அவர்கள் அதிக வேதனையுடனேயே செயல் படுவார்கள். இவர்களின் நோய் தன்மையை கண்டறிவது என்பது சாதாரண மன அழுத்தம் உடையவர்களைவிட கடினமாகும். ஏனெனில், தினசரி வேலைகளை அவர்கள் சரியாகச் செய்து வருவதால் அவர்களிடம் ஒரு பிரச்னை உள்ளதாகவே சக நபர்கள் உணர மாட்டார்கள்.

அனைவருக்கும் பிரச்னைகள் இருக்க, ஒரு சிலருக்கு மட்டும் ஏன் மன அழுத்தம் ஏற்படுகிறது என்கிற கேள்வி எழலாம். ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனிப்பட்ட முகம் இருப்பது போலத்தான் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு தனிப்பட்ட மனம் இருக்கும். இரு மனிதர்களுக்கு வெவ்வேறு விதமான சூழ்நிலைகளும் கையாளும் திறனும் இருக்கும். எப்படி ஒரு வாகன விபத்து நடந்தால் ஒரு நபர் அந்த விபத்திற்கு காரணம் இல்லையோ அது போல மன அழுத்தத்திற்கும் அந்த நபர் காரணமாக மாட்டார்.

மன அழுத்தத்தை சோம்பேறித்தனம் எனத் தட்டிக் கழிக்கும் ஓர் இழிவான பழக்கம் நம் மக்களிடம் – குறிப்பாக வயது முதிர்ந்த மக்களிடம் உள்ளது. தற்கால இளைஞர்கள் முந்தைய காலத்தைவிட பல மடங்கு அதிகம் போட்டிச் சுமை உள்ள ஒரு சூழலில் இருக்கிறார்கள் என அவர்கள் உணர்வதில்லை. மன அழுத்தத்தை சோம்பேறி என தட்டிக் கழிக்கும்போது மனஅழுத்தம் உடையவர் இன்னும் அதிக மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும்.

நம் சமுதாயத்தில் மன அழுத்தம் பற்றிய அறிதல் இன்னும் சரிவர ஏற்பட வில்லை. இந்த மன அழுத்தத்தினால் பெண்களும் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். பெண்களுக்கு முக்கிய காரணியாக மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் ஹார்மோன்களின் மாற்றங்கள். முக்கியமாக தைராய்டு ஹார்மோன் சமநிலை சீர் குலைவதால் மன அழுத்தம், குழப்பம், வெறுமை போன்றவை ஏற்படும்.

மன அழுத்தத்திற்கு பார்மாகோ தெரபி எனப்படும் மருந்துகள் மூலம் சரி செய்வது, சைகோ தெரபி என கவுன்சலிங் மற்றும் செயல்முறைகலை மாற்றி அமைத்தல் மூலம் சரி செய்வது எனப் பலவித சிகிச்சைமுறைகள் உள்ளன. மருந்துகள் கொடுத்து நரம்புக் கடத்தியின் நிலைகளை சமநிலைப்படுத்தினாலும், ஒரு மனிதரின் சூழ்நிலைகள் மற்றும் அவரை சுற்றியுள்ள மனிதர்களின் சூழ்நிலைகளும்  சேர்ந்தே  நீண்ட கால நலனுக்கு வழி வகுக்கும்.

மருத்துவர் மருந்துகள் மட்டும் அல்லாது, வாழ்க்கை நிலைகளை நிர்வகிக்கும் திறன்முறைகளையும் கற்றுத் தருவர்கள். இதன் மூலம் மனச் சுமைகளைக் கையாளும் திறன்கள் ஏற்பட்டு மன அழுத்தத்தை கையாளும் திறன் ஏற்படும். பிறரைப் போன்று இன்பத்துடன் வாழ்க்கையை கொண்டு செல்லும் நிலை ஏற்படும். மன அழுத்தம் தற்கொலைக்கு மிக முக்கிய காரணமாக இருப்பதால், இதை அசட்டுத்தனமாக கருதுவது ஆபத்தில் முடியும். நம் மனம் போல பிறர் மன சந்தோஷத்தையும் நாம் பேணுதல் வேண்டும்.

மன நலம் பகிர்வோம்!

மன அழுத்தத்தினால் மாதவிடாய் காலகட்டத்தில் பெண்கள் அதிகப் பாதிப்புக்கு உள்ளகின்றனர். இதற்கு முக்கிய காரணி மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள். தைராய்டு ஹார்மோன் சமநிலை சீர்குலைவதாலும் மன அழுத்தம், குழப்பம், வெறுமை போன்றவை ஏற்படும்.

மன அழுத்தத்துக்கு எது காரணம்?

டோபமைன், செராடோனின் ஆகிய இரு முக்கிய நரம்புக் கடத்திகளே மன அழுத்தத்துக்கு முக்கியமான காரணிகள். டோபமைன், செராடோனின் ஆகியவை மூளையில் உள்ள நரம்புப் பகுதிகளில் சரிவர சுரக்கவில்லை என்றால் மன அழுத்தம் ஏற்படும்.

சாதாரணமான ஒரு மனித மூளையில் ஒரு சந்தோஷத்துக்குரிய வாழ்வியல் நிகழ்வு நடைபெறுமாயின் செரோட்டோனின், டோபமைன் ஆகியவை சுரந்து மகிழ்வை ஏற்படுத்தும். வாழ்வியல் நிலை, குடும்பச் சூழல், பணிச் சுமை, சந்தோஷமற்ற மண வாழ்வு என இருக்கும் பல்லயிரக்கணக்கான காரணங்களில் ஏதோ ஒன்று இந்த டோபமைன் செரடோனின் சமநிலையைக் சீர்குலைய செய்து மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.

Dr. Mohamed Naveeth,
Consultant – Psychiatry,
Kauvery Hospital Tirunelveli

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 •  Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801

 

 

Recent Posts

PRP injections for knee pain – How effective are they?

Summary Knee pain is a common condition among seniors, with advancing age. There can be…

5 hours ago

Moving past tragedy – Reconstructive surgery for burn victims

Table of Content Introduction What is Reconstructive burn surgery? What are the benefits of Reconstructive…

1 day ago

How is Ex Vivo Lung Perfusion for Lung Transplantation done

Summary Ex Vivo Lung Procedure is a kind of therapy that is beneficial to people…

6 days ago

Living with Glaucoma

Table of Content Introduction to Glaucoma Glaucoma - Not the end of the world Educate…

1 week ago

Fracture Cast Care

Table of Content What is a Fracture? Fracture Diagnosis and Treatment Fracture Cast Fracture Cast…

1 week ago

Implanting Biventricular Assist Device for Heart Failure Treatment

Table of Content Introduction to CHF and VADs What is a Bi Ventricular Assist Device?…

2 weeks ago