யுனிவர்சிட்டி காலேஜ் லண்டனின் போக்குவரத்து ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆய்வு, பயணம் செய்யும் நபர்கள் சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது.
உங்கள் அருகிலுள்ள கடற்கரைக்கு வாகனத்தில் சென்றாலும் , சுவிட்சர்லாந்திற்கு விமானத்தில் சென்றாலும், பயணம் என்பது எப்போதும் உற்சாகமாகவும் சாகசமாகவுமே இருக்கும். இந்த ஆய்வில், பயணம் செய்பவர்கள் மற்றும் பயணம் செய்யாதவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் வித்தியாசம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
விட்டு வெளியே வராத நபர்கள், அல்லது அவர்கள் விரும்பியதைவிட குறைவான பயணத்தையே மேற்கொள்ளும் நபர்கள், மோசமான ஆரோக்கியத்தைக் கொண்டிருந்தனர். ஆரோக்கியமான நபர்கள் உள்ளூர் பகுதியிலிருந்து குறைந்தபட்சம் 15 மைல்களுக்கு அப்பால் வெளியே செல்வதாக ஆராய்ச்சிக் குழு சொல்கிறது. இந்த ஆராய்ச்சியாளர்கள் இங்கிலாந்தின் வடக்குப் பகுதியிலிருந்து 2,747 நபர்களைப் பின்தொடர்ந்து அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் பயணத்துடனான உறவை ஆய்வு செய்தனர்.
வீட்டிலிருந்து குறைந்தது 24 கிலோமீட்டர் பயணம், மற்றும் அடிக்கடி அதைச் செய்தவர்கள், ஒட்டுமொத்தமாக சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பதாகத் தெரிவித்தனர். பயணத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் இடையிலான தொடர்பு 55 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களில் மிகவும் வலுவாக உள்ளது. இந்த ஆய்வின் முதன்மை ஆய்வாளரான டாக்டர் பாலோ அன்சியஸ், தொழில் நலன்கள் அல்லது கல்வி நன்மைகள் போன்ற அதிக வாய்ப்புகளின் அதிகரிப்பு காரணமாக பயணம் தனிநபர்களுக்கு எவ்வாறு பயனளிக்கும் என்பதையும் இந்த ஆராய்ச்சி உறுதிப்படுத்தியது என்றார். சமூகத் தொடர்பானது ஒருவரின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் திருப்தியுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது.
சவுத் யுனிவர்சிட்டியின் கூற்றுப்படி, சமூக தொடர்புகள் நன்மை பயக்கும். ஏனெனில், அது உணர்ச்சி மற்றும் உடல் நலனை மேம்படுத்த உதவுகிறது.
சமூகத் தொடர்பு என்பது மனிதர்களுக்கு மிகவும் முக்கியமானது.ஏனெனில், அது நாம் பங்கேற்கவும் உறவுகளை உருவாக்கவும் கூடிய ஒரு சமூகத்தை உருவாக்குகிறது. சமூகஉறவுகளை உருவாக்குவதற்கான சில வழிகளில் தன்னார்வத் தொண்டு செய்வது, பொழுதுபோக்கு, சுற்றுலா அல்லது விளையாட்டுக் குழுவில் சேர்வது அல்லது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.
Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801
Summary Knee pain is a common condition among seniors, with advancing age. There can be…
Table of Content Introduction What is Reconstructive burn surgery? What are the benefits of Reconstructive…
Summary Ex Vivo Lung Procedure is a kind of therapy that is beneficial to people…
Table of Content Introduction to Glaucoma Glaucoma - Not the end of the world Educate…
Table of Content What is a Fracture? Fracture Diagnosis and Treatment Fracture Cast Fracture Cast…
Table of Content Introduction to CHF and VADs What is a Bi Ventricular Assist Device?…