பக்கவாதம் என்றால் என்ன?

பக்கவாதம் என்றால் என்ன?
February 24 11:23 2021 by admin Print This Article

உலகம் முழுவதிலும் ஏற்படும் நோய் காரண உயிரிழப்புகளில் பக்கவாத நோய்  முன்னணி வகிக்கிறது. இந்த ஆண்டு 1 கோடியே 45 லட்சம் மக்கள் பக்கவாதம் நோயால் பாதிக்கப்படுவார்கள் என்றும், இதில் 55 லட்சம் மக்கள்  இந்நோயால் உயிரிழக்க நேரிடும் என்று ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. உலகம் முழுவதிலும் 8 கோடி மக்கள் பக்கவாதத்திலிருந்து உயிர் பிழைத்து  வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதில் 5 கோடி மக்கள் பக்கவாதத்தால் ஏற்பட்ட குறைபாடுகளுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் சகஜமான நிலையில் வாழ்வதில்லை. ஆனால் சரியான சிகிச்சைகளாலும், முறையான பயிற்சிகளாலும் ஒரு அர்த்தமான வாழ்க்கையை வாழ இயலும், அங்ஙணம் பலர் மீண்டு வந்து அர்த்தமுள்ள சாதனையாளர்களாக விளங்குகிறார்கள். உலக பக்கவாத நோய் நாளை முன்னிட்டு சேலம் காவேரி மருத்துவமனை, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அருண் கூறுவதாவது,

பக்கவாதம் என்றால் என்ன?

பக்கவாதம் என்பது மூளைக்கு போகும் இரத்தம் தடைப்பட்டு, மூளை இயங்குவதற்கு தேவையான சக்தி இல்லாமல், மூளையின் செல் தசைகள் பாதிப்படைவது தான். மூளையின் எந்த பகுதி பாதிக்கப்பட்டுள்ளதோ, அதைப் பொறுத்து நமது உடலின் பாகங்களில் குறைபாடுகள் ஏற்படும். பக்கவாதத்திலிருந்து மீண்டு வர வேண்டுமென்றால் முதலில் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டியது. பக்கவாதத்தின் அறிகுறிகளை புரிந்துக் கொள்ளுவதும், அங்ஙணம் அறிகுறிகளை உணரும்போது துரிதமாக செயல்படுவது தான். சர்வதேச அளவில் பக்கவாதத்தை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நலப்பணி நிறுவனம், தன்னாய்வு செய்துக் கொள்ள ஒருமுறையை விளக்குகிறது.

BE FAST

Balance: உடற்சமநிலை இழத்தல்

Eyes : ஒன்று அல்லது இரண்டு கண்களிலும் பார்வை இழத்தல்
Face : முகம் ஒரு புறமாக இழுத்து கொள்ளுதல்
Arm : ஒரு பக்க கை கால்கள் பலவீனமடைந்து செயல்பட இயலாதது
Speech : பேச இயலாததோ அல்லது பேச்சில் குளறுதல்
Time : காலம் பொன்னானது என உணர்ந்து மருத்துவ உதவியை நாடுதல்

இவற்றை உணருவதாலும், செயல்படுவதாலும் தாம் பக்கவாதத்தில் ஏற்படும் பாதிப்பை வெகுவாக குறைக்க இயலும்.

இத்தகைய கொடுமையான பக்கவாதத்திலிருந்து மீண்டு வருவதைக் காட்டிலும், பாதுகாத்தல் மிகவும் எளிது, அதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை மிகவும் சில ஆனால் முக்கியமானவை. அவை, உங்கள் உடல் நலம் பேணுதல்
நோய் காரணிகளை உணர்ந்து தவிர்த்தல். முதன்மையான விஷயம், நோய் காரணிகளை அறிந்து கொள்ளுதல், அதற்கு ஏதேனும் மருத்துவரை அணுகி உங்களை நீங்களே மதிப்பிட்டுக் கொள்ளுங்கள்.

Also Read: Types of Strokes

உங்கள் பரம்பரையில் யாருக்கவாது பக்கவாதம் இருந்ததா?, உங்களுக்கு உயர் இரத்தக் கொதிப்பு உள்ளதா? இருதய நோய் உள்ளதா? உயர் கொழுப்பு சத்து உள்ளதா? என்பவை தான் மதிப்பிட வேண்டியவை.

1. உங்கள் குடும்பத்தில் யாருக்கவாது பக்கவாதநோய் இருந்திருந்தால், உடனே பக்கவாதம் ஏற்படுத்தக் கூடிய காரணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி, கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.

2. இரத்தக் கொதிப்புத்தான் பக்கவாதம் ஏற்படுவதற்கான முழு முதற் காரணம், உடனே உங்கள் மருத்துவரை அணுகி, உங்களுக்கு இரத்தக் கொதிப்பு உள்ளதா என்பதை உறுதிச் செய்து கொள்ளுங்கள். அதைக் கட்டுப்படுத்த தேவையான உணவு வகைகளையும், உடற்பயிற்சிகளையும் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள். இரத்தக் கொதிப்பை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள தேவையான மருந்துகளை மருத்துவரிடமிருந்து பெற்றுக் கொள்ளுங்கள்.

3. அடுத்தது, இருதய நோய் & முழுவதுமான இருதயம் ஆராக்கியமாக உள்ளதா என்பதை அறிந்துக் கொள்ளுங்கள் இருதயத்தில் ஏற்படும் சில நோயாலும், அடைப்புகளாலும் கூட பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் மருத்துவரை அணுகி அறுவை சிகிச்சையின் தேவைக் குறித்தும், இரத்தக் கட்டுகளை கரைக்கும் மருந்துகள் குறித்தும் ஆலோசனை செய்து தேவையான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

4. உயர் கொழுப்புச் சத்து, உங்கள் இரத்த நாளங்களில் படிந்து, இரத்த நாளத்தின் விட்டத்தை குறுகச் செய்கிறது. இதனால் மூளைக்கு செல்ல வேண்டி இரத்த அளவு குறைந்து பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கொழுப்பு இல்லாத உணவுகளை உண்ண பழகுங்கள், உடற்பயிற்சி செய்து கொள்ளுங்கள். மருத்துவரிடம் கேட்டு கொழுப்பை குறைப்பதற்கான மருந்துகளை உட்கொள்ளுங்கள்.

மருத்துவரிடம்
கேட்டு புரிந்து கொள்ள வேண்டிய மற்ற சில காரணிகள்:

Sleep Apnea” எனும் உறக்கத்தில் ஏற்படும் மூச்சு திணறல், சிகிச்சை எடுக்காவிடில், உயர் இரத்த அழுத்தம், இருதய செயலிழப்பு, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற விளைவுகளை ஏற்படுத்தும்.

நீரிழிவு
நோய் : நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு 30 சதவீதம் கூடுதல் உள்ளது.

இரத்த
சுற்றோட்ட பிரச்சனைகள் :  இரத்த நாளங்களில் வீக்கம், அடைப்பு இருதயத்திலிருந்து இரத்தம் வெளியேறுவதில் கோளாறு உள்ளவர்களுக்கு பக்கவாதம் வர வாய்ப்பு உண்டு.

ஹார்மோன்கள்
: ப்ரத்யேகமாக பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோனகள் அளவு மாற்றத்தினால் கூட பக்கவாதம் வரலாம்.
வீட்டில் நீங்கள் எடுக்க வேண்டிய ஒழுங்கு நடவடிக்கைகள்

புகைப்பிடித்தலை
நிறுத்த வேண்டும்: புகைப்பிடித்தல், இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை அதிகப்படுத்தும், இரத்தம் உரையும் தன்மையை அதிகரிக்கும், இரத்தத்தின் திரவத் தன்மையை அதிகரிக்கும்.

பருமனான
உடல்: உடலின் சுற்றளவு கூடுவது நேரடியாக உயர் இரத்த அழுத்தம், இருதய நோய்கள், நீரிழிவு நோய் மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களை 80% ஏற்படுத்தக் கூடிய வாய்ப்புடையது. உடனே உங்கள் மருத்துவரை அணுகி, எடையைக் குறைக்க வேண்டிய சரியான வரைமுறைகளையும், மருந்துகளையும் தெரிந்துக் கொள்ளுங்கள்.

உடற்பயிற்சி ஒரு இன்றியமையாது சிகிச்சை. அது உங்கள் உடல் எடை, கொழுப்பு, மன அழுத்தம், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் குறைத்து உங்கள் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றத்தை தரவல்லது. ஒரு நாளில் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள் தொடர்ந்து செய்ய இயலவில்லை என்றால், பிரித்து இரண்டு மூன்று பாகங்களாக செய்யுங்கள்.

சத்தான
உணவு சந்தோஷமான வாழ்வு:

சத்தான உணவு என குறிப்பிடும்பொழுது உணவுக் கட்டுப்பாடு அல்ல, சரியான உணவு, சரியான அளவில், சரியான நேரத்தில் அங்ஙணம் செய்வது, பக்கவாதத்தின் பாதிப்பை குறைக்கக் கூடியது. அதிகமான பழ வகைகள், காய்கறிகள், நார்சத்து உள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள். உப்பை தவிர்ப்பது நல்லது, கொழுப்பு சேர் உணவுப் பொருட்களை அறவே தவிர்க்கவும், அவை உங்கள் இரத்த நாளங்களில் படிந்து, இரத்த சுற்றோட்டத்தை குறைத்து விடும்.

அளவுக்கு
மீறினால் மதுபானம் கூட நரம்பை மடக்கும்:

அதிகமான அளவு மதுபானம் அருந்துவது, உயர் இரத்த அழுத்தத்தை உருவாக்கும் அது பக்கவாதத்திற்கு வழிவகுக்க வாய்ப்பு உண்டு. மதுபானத்தையும் அறவே தவிர்ப்பது நல்லது அல்லது மிகவும் குறைந்த அளவுகளில் உட்கொள்வது சால சிறந்தது. அதிலும் சிவப்பு வைன் அருந்துவதால் resveratrol என்னும் உட்பொருளால் இருதயமும், மூளையும் பாதுகாக்கப் படுகிறது.

பக்கவாதத்திற்கு
பின் வாழ்க்கை:

வயது வரம்பின்றி யாருக்கு வேண்டுமானாலும் எந்த சூழ்நிலையிலும் பக்கவாதம் ஏற்படலாம். ஒவ்வொரு தனி நபருக்கு பக்கவாதத்தால் ஏற்படும் பாதிப்பாகட்டும், பாதிப்புகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய சிகிச்சை முறைகள் மாறுபடலாம். பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதற்கு உந்து கோளாக விளைவது என்னவென்றால், அது பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்டதே, பாதிக்கப்பட்டவர்கள் அனேகமானோர், அதிலிருந்து விடுபடுவதற்கு போராடுவதும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் தான் இன்னும் பலரை காப்பாற்றுவதற்கான முயற்சியை மேற்கொள்ள மருத்துவப் பணியாளர்களை தூண்டுகிறது.

பக்கவாதத்திலிருந்து குணமடைந்தவர்களுக்கும், அவர்களை கவனித்துக் கொள்பவர்களுக்கும், அந்த குடும்பத்தினருக்கும் எந்த சூழ்நிலையிலும் சகஜமான நிலைமையாக இருக்க போவதில்லை. ஆனால் நிகழ்ந்ததை எண்ணி துவலாமல், ஏற்பட்ட குறைபாட்டிற்கான தேவைகளை ஏற்படுத்திக் கொண்டு அதற்கேற்றார்போல் ஒட்டு மொத்த குடும்பத்தினரும் அனுசரித்து வாழ்வதே பக்கவாதத்திலிருந்து குணமடைவதின் மிகப் பெரிய மார்க்கம். இது உடனே நடந்து விடுவதில்லை. அதனால் பயந்தோ, குழப்பமடைந்தோ விட வேண்டாம்.

படிப்படியாக புதிய வாழ்க்கை முறைகள், சிறிய மாற்றங்கள் உங்களை பழக்கப்படுத்துவதற்கு உதவும், இந்த வழிமுறைகளை உங்கள் மருத்துவர்களும், மருத்துவ செவிலியர்களும் இயன்முறை சிகிச்சை முறை நிபுணர்களால் முறையான வகையில் வகுத்துக் கொடுக்க முடியும், அதை கண்காணித்து தேவையான மாற்றங்களையும் அவர்களால் மட்டும்தான் செய்ய முடியும். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் தனிமையும், காழ்ப்புணர்ச்சியும் ஒரு பெரிய எதிரியாக இருக்கும். உலகெங்கிலும் 8 கோடி குணமடைந்து தைரியமாகவும், உறுதியாகவும் இந்த உலகத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள். அது போன்றோர்களை சந்தியுங்கள், உரையாடுங்கள், அவர்களிடம் கற்றுத் தெரிந்துக் கொள்ளுங்கள் இது உங்களுக்கு நம்பிக்கையை அளிக்கக்கூடும்.

இத்தகைய சிக்கலான, சிரமமான பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட 100க்கு மேற்பட்ட நபர்களை காப்பாற்றி, அவர்களுக்கு இயல்புக்கு ஒத்த ஒரு வாழ்க்கை நிலையை சேலம் காவேரி மருத்துவமனையின் பக்கவாத சிறப்பு சிகிச்சை மருத்துவ குழுவினரான மூளை நரம்பியல் சிகிச்சை நிபுணர், மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபணர், சிறப்பு கதிரியக்க சிகிச்சை நிபுணர், 24 மணி நேர அவசர சிகிச்சை நிபுணருடன் அவரது குழுவினர், கைத் தேர்ந்த செவிலியர்கள், பயிற்சி பெற்ற இயன்முறை சிகிச்சை நிபுணர்கள் மூலம் அளித்துள்ளது. இது மட்டுமல்ல இது போல குணமடைந்தவர்களை கொண்டு சிகிச்சையில் உள்ளவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதற்காக Stroke Survivors Club என்ற அமைப்பை உருவாக்கி நடத்தி கொண்டிருக்கிறது என்று கூறினார்.

Dr P. Arun

 

Dr. P. Arun
Consultant, Brain and Spine Surgery
Kauvery Hospital Salem

 

 

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai, Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.

Chennai – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801

  Categories:
write a comment

1 Comment

  1. Sruthi
    November 22, 13:18 #1 Sruthi

    Stroke is a common condition among old people and thus this is an article that should be shared widely. Also thanks for sharing tips for life after stroke since it gives courage that people can lead a great life even after stroke.

    Reply to this comment

Add a Comment

Your data will be safe! Your e-mail address will not be published. Other data you enter will not be shared with any third party.
All * fields are required.