தமிழ்நாட்டின் பன்முக சிறப்பு மருத்துவமனை சங்கிலித்தொடர் நிறுவனங்களில் முதன்மை வகிக்கும் காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் ஓர் அங்கமான சென்னை, காவேரி மருத்துவமனை, அண்மையில் மிகவும் ஆபத்தான இதயத்தாள / லய பிரச்சினைகள் கொண்ட 55 வயது பெண்மணியின் உயிரைக் காப்பதற்காக மூன்று மருத்துவச் செயல்முறைகளை வெற்றிகரமாக செய்திருக்கிறது.
55 வயதுடைய பள்ளி ஆசிரியை திருமதி ராதா பாலாஜி, காவேரி மருத்துவமனையின் அவசரநிலை சிகிச்சை துறைக்கு கடுமையான இதய நோய் பாதிப்புடன் அழைத்து வரப்பட்டார். கடுமையான மாரடைப்புடன் மெதுவான இதயத்துடிப்பு மற்றும் இதய அதிர்ச்சி (உடலுக்குத் திறனுடன் ரத்தத்தை பம்ப் செய்வதற்கு இதயத்தால் இயலாத காரணத்தால் ரத்த அழுத்தமானது ஆபத்தான அளவுக்கு குறைவது போன்ற சிக்கல்கள் அவருக்கு இருப்பது கண்டறியப்பட்டது.
உடனடியாக அவருக்கு பிரைமரி ஆஞ்சியோபிளாஸ்டியும், அடைப்பு இருந்த ரத்தநாளத்தில் (வலது இதயத்தமனியில்) ஸ்டெண்ட் பொருத்துதலும் செய்யப்பட்டன. இதய அதிர்ச்சியின் காரணமாக, இந்தச் செயல்முறையைப் பாதுகாப்பாக மேற்கொள்வதற்கு இன்ட்ரா-ஆர்டிக் பலூன் பம்ப் (IABP) என்ற சாதனத்தின் உதவி அவருக்குத் தேவைப்பட்டது. இச்செயல்முறையின்போதும் அதற்குப் பிறகும் மிக ஆபத்தான இதய லய பிறழ்வான இதயக்கீழறையில் மிகை இதயத்துடிப்பு (VT – Ventricular Tachycardia) நிலை அவருக்கு திரும்பத் திரும்ப ஏற்பட்டது. இதனால் ஒரு வெளியார்ந்த உதறல்நீக்கி சாதனத்திலிருந்து குறைந்தபட்சம் 14 அதிர்ச்சிகள் அவருக்குத் தேவைப்பட்டன.
“இத்தகைய மருத்துவ நிலையானது, போஸ்ட் MI-VT ஸ்டார்ம் என அழைக்கப்படுகிறது. அதாவது ஒரு புயலின் மையச் சுழல் பகுதியில் நோயாளி சிக்கியிருப்பதையே இது குறிக்கிறது. மருந்துகளின் மூலம் இயல்பு நிலைக்கு VT திரும்பவில்லை. இதயத்தின் இடப்பகுதியில் உள்ள மிட்ரல் வால்வு சரிவு மற்றும் நீண்ட QT சிண்ட்ரோம் ஆகியவற்றின் காரணமாக, இப்பெண்ணின் நிலைமை மேலும் சிக்கலானதாக இருந்தது. ஆகவே, 4வது நாளன்று, இதய லயமின்மையை ஏற்படுத்துகின்ற செல்களை அழிப்பதற்கான ஒரு செயல்முறையான ரேடியோ ஃப்ரீக்வென்சி அப்லேஷன் (RFA) என்ற கதிரிக்க அதிர்வெண் நீக்க மருத்துவ செயல்முறைக்காக ஹைபிரிட் கேத்லேப் சிகிச்சைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். இதயக் கீழறையில் மிகை இதயத்துடிப்பை முடுக்கி விடுகின்ற ஆதாரத்தைக் கண்டறிவதற்காக ஒரு மேம்பட்ட முப்பரிமாண நேவிகேஷன் சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது. 6 மணி நேரம் நீடித்த கடினமான நீண்ட செயல்முறைக்குப் பிறகு VT பிரச்சினையிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். அதன்பிறகு அவரது ரத்த அழுத்தமும் ரத்த ஓட்டச் செயல்பாடும் விரைவாகவே மேம்பட்டன.
அபாயகரமான இதய லய பிரச்சினைகளுக்கான சாத்தியக்கூறு அந்நோயாளிக்கு அதிகமாக இருந்ததால், இத்தகைய பாதிப்புகள் எதிர்காலத்தில் ஏற்படாமல் காப்பதற்காக, அடுத்த நாளன்று சருமத்தின் ஊடாக டிஃபைபிரிலேட்டர் (Defibrillator) என்ற உதறல் நீக்கி சாதனம் பொருத்தப்பட்டது. அதன்பிறகு படிப்படியாக அதிகரிக்கப்பட்ட மொபிலிசேஷன் மற்றும் ஊட்டச்சத்துடன் அவருக்கு இதய மறுவாழ்வு சிகிச்சை வழங்கப்பட்டது. 14ம் நாளன்று குணமடைந்த நிலையில் மருத்துவமனை யிலிருந்து அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்” என்று சென்னை காவேரி மருத்துவமனையின் இதய மின் உடலியங்கியல் மருத்துவத் துறையின் டாக்டர் தீப் சந்த் ராஜா, இந்நோயாளியின் நிலைமை மற்றும் அவருக்கு செய்யப்பட்ட பல்வேறு மருத்துவ செயல்முறைகள் குறித்து விளக்குகிறார்.
“காவேரி மருத்துவமனையின் நவீன உட்கட்டமைப்பு வசதி, ஹைபிரிட் கேத் லேப், இதயவியல் மருத்துவர்கள், இதயவியல் சார்ந்த உணர்விழப்புத்துறை மருத்துவர்கள் மற்றும் இதய அறுவை சிகிச்சை நிபுணர்களை உள்ளடக்கிய
சிறப்பான ஒருங்கிணைப்புடன் இயங்கும் மருத்துவக் குழுவினர் போன்ற அம்சங்களே, இந்நோயாளிக்கு இத்தகைய சிக்கலான மருத்துவச் செயல்முறைகளை செய்வதற்கான நம்பிக்கையை எனக்கு வழங்கியது. இந்தச் செயல்முறைகள் இல்லை என்றால், VT புயல் (ஸ்டார்ம்) என அழைக்கப்படும் கடுமையான சிக்கலிலிருந்து இந்நோயாளியை வெளியே கொண்டு வருவது சாத்தியப்பட்டிருக்காது” என்று டாக்டர் தீப் சந்த் ராஜா கூறுகிறார்.
“உரிய நேரத்தில் செய்யப்பட்ட ஆஞ்சியோபிளாஸ்டி, ஒரு மிகப்பெரிய மாரடைப்பு மற்றும் இதய அதிர்ச்சியிலிருந்து இந்தப் பெண்ணைக் காப்பாற்றியது. இச்சிகிச்சையின்போதும் அதற்குப் பிறகும் VT ஸ்டார்ம் இருந்ததால், சிக்கலான சூழலே நிலவியது. அப்பெண்ணுக்கு ஏற்கனவே இருந்த நீண்ட VT சிண்ட்ரோமே இதற்குக் காரணம். அப்லேஷன் (அகற்றல்) செயல்முறையை இதயவியல் மின் உடலியங்கியல் நிபுணர் உறுதி செய்தார். அவசியமான உட்கட்டமைப்பு வசதி இல்லையென்றால், இந்தச் சிக்கலான சூழலை நிர்வகிப்பது சாத்தியமில்லாமல் போயிருக்கும். மருத்துவப் பணியாளர் குழுவின் ஆதரவும் நோயாளியின் குடும்பத்தினர் வைத்திருந்த தளராத நம்பிக்கையும் இந்த வெற்றியை எட்டுவதற்கு எங்களுக்கு உதவியிருக்கிறது” என்கிறார் ஆரம்பநிலை சிகிச்சைக்கான இடையீட்டு இதயவியல் நிபுணரான டாக்டர் சி.சுந்தர்.
சென்னை, காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் செயலாக்க இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ், வெற்றிகரமான இச் சிகிச்சை குறித்துப் பேசும்போது, “ஆரம்பநிலை சருமத்தின் ஊடான ஆஞ்சியோபிளாஸ்டி என்பது உயிர்காக்கும் சிகிச்சையாக இருக்கிறது. எனினும், ஒரு VT ஸ்டார்ம் என்பதில் சிக்கிய இந்நோயாளியின் உயிரைக் காப்பதற்கு அபாயகரமான இதய லய பிரச்சினையை தீர்ப்பதற்கான ரேடியோ ஃப்ரீக்வென்சி சிகிச்சையும் (RFA) மிக முக்கியமானது. எக்மோ (ECMO), ஹைபிரிட் கேத்லேப் மற்றும் அவசியமான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன், சர்வதேச அளவில் பயிற்சி பெற்ற இதய மின் உடலியங்கியல் மருத்துவர்களும் காவேரி மருத்துவமனைகளில் இருப்பதால், இதய லயக் கோளாறுகளில் இத்தகைய கடும் சிக்கல்களுக்கு எங்களால் சிகிச்சையளிக்க முடிகிறது. பள்ளி ஆசிரியையான இந்தச் சிறப்பான பெண்மணியின் உயிரைக் காப்பாற்றியதற்காக டாக்டர் சி.சுந்தர், டாக்டர் தீப் சந்த் ராஜா மற்றும் மருத்துவக் குழுவினரை நான் மனமார பாராட்டுகிறேன்” என்றார்.
காவேரி மருத்துவமனை, டாக்டர் எஸ்.தீப் சந்த் ராஜா,இதயவியல் மற்றும் இதய மின் உடலியங்கியல் மருத்துவர் (சென்னை), டாக்டர் சக்திவேல் – மின் உடலியங்கியல் மருத்துவர் (சென்னை), டாக்டர் வி.விஜய் சேகர் – இதயவியல்
மற்றும் இதய மின் உடலியங்கியல் மருத்துவர் (திருச்சி) மற்றும் டாக்டர்.டி. ஜோசப், இதய இடைவினையாற்றல் மற்றும் மின்உடலியங்கியல் மருத்துவர் (திருச்சி) ஆகிய நான்கு இதய மின் உடலியங்கியல் (இதய லயம்) சிறப்பு நிபுணர்களை தமிழ்நாட்டில் கொண்ட ஒரே மருத்துவமனையாகும். சென்னை, திருச்சி மற்றும் திருநெல்வேலியில் ஆகிய இடங்களில் முப்பரிமாண எலக்ட்ரோபிசியாலஜி நேவிகேஷன் அமைப்புகளையும் காவேரிமருத்துவமனை கொண்டிருக்கிறது. ஹார்ட் ரிதம் சிறப்பு மருத்துவர்களை தொடர்புகொள்ள பிரத்யேக 24*7 ஹெல்ப்லைன் +91 80562 04449 என்ற எண்ணில் அழைக்கலாம் அல்லது வாட்ஸ்அப் செய்யலாம். மேலும் விவரங்களுக்கு heartrhythmservices@kauveryhospital.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதலாம்.
Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.
Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801
Comment:*
Nickname*
Save my name, email, and website in this browser for the next time I comment.