நடைப்பயிற்சியும் நீரிழிவும் உயர் ரத்த அழுத்தமும்

நடைப்பயிற்சியும் நீரிழிவும் உயர் ரத்த அழுத்தமும்
May 24 06:27 2024 by admin Print This Article

உயர் ரத்த சர்க்கரை அல்லது நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவை பெரும்பான்மையான மக்களைப் பாதிக்கும் இரண்டு முக்கிய வாழ்க்கை முறை நோய்கள். மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகச் செயலிழப்பு, பிற இதய நோய்கள் போன்ற பல உடல்நலச் சிக்கல்களுக்கு அவை முக்கிய காரணமாகும். இதற்கு மரபணுக்கள் பெரும்பாலும் முக்கிய பங்கு வகிக்கும்தான். அதே வேளையில், உட்கார்ந்த வாழ்க்கை மோசமான முறையும் உணவுப் பழக்கமுமே உயர் ரத்த அழுத்தம் மற்றும் உயர் ரத்த சர்க்கரையை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

“ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் இடையே செய்யக்கூடிய ஐந்து நிமிட நடைப்பயிற்சியானது ரத்த சர்க்கரை, ரத்த அழுத்தம் ஆகிய இரண்டையும் குறைக்க உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினார். இது நாள் முழுவதும் உட்கார்ந்திருப்பவர்களுக்கு இருப்பதைவிட 58% அளவுக்கு ரத்த சர்க்கரையை குறைக்கிறது” என்கிறார் கொலம்பியாவின் வகேலோஸ் காலேஜ் ஆப் பிசிஷியன்ஸ் அண்ட் சர்ஜன்ஸில் நடத்தை மருத்துவத்தின் இணைப் பேராசிரியர் கெய்த் டயஸ். நடப்பவர்களில் 58% ரத்தச் சர்க்கரைக் குறைப்பு என்பது ஆறு மாதங்களுக்கு தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம் நீங்கள் எதிர்பார்க்கும் விளைவுடன் ஒப்பிடத்தக்கது.

  • ஒவ்வொரு 30 நிமிடங்களுக்குப் பிறகும் மறக்காமல் நாற்காலியிலிருந்து எழுந்திருங்கள்.
  • நாற்காலி யோகா கற்றுக்கொள்ளுங்கள்.
  • தொலைபேசி அழைப்புகளில் இருக்கும்போது நடக்கவும்.
  • முடிந்தவரை லிஃப்டுக்குப் பதிலாக படிக்கட்டுகளைப் பயன்படுத்தவும்.
  • வேலை இடைவேளையின் போது சிறிய உடற்பயிற்சிகளைச் செய்யவும்.
  • அடிக்கடி கை கால்களை நீட்டவும்.

இதுபோன்ற நடவடிக்கைகள் பிறருக்கும் ஆரோக்கிய விழிப்புணர்வை அளிக்கும். அவர்களின் செயல்பாட்டு நிலைகளை மேம்படுத்த உந்துதலையும் தரும் என்று கெய்த் டயஸ் கூறுகிறார். மருந்துகளை உட்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவைக் கட்டுப்படுத்தவும் இவை உதவும். ஆனால், அவர்கள் குறிப்பிட்ட இடைவெளிகளில் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை பெறுவதும் அவசியம் என்று அவர் கூறுகிறார். உடல் செயல்பாடு, ஊட்டச்சத்து, தூக்கம், உணர்ச்சி ஆரோக்கியம் ஆகிய அடிப்படை அம்சங்களில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும்:

ஒருவர் படுத்த படுக்கையாக இருந்தாலும் அசைவுகள் அவசியம் என்று வாழ்க்கை முறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் (படுக்கையில் இருக்கும் நோயாளிகளுக்கு), ஆதரவான சுழற்சிக்காக நோயாளியின் உள்ளங்கால்களை மசாஜ் செய்வதற்கும், செயலற்ற பயிற்சிகளை எளிதாக்குவதற்கும் பிசியோதெரபிஸ்ட்டுகள் உதவார்கள்.

ஆதாரம்: மெடிக்கல் சயின்ஸ் இன் ஸ்போர்ட்ஸ் அண்ட் ஃபிட்னெஸ்.

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 •  Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801

  Categories:
write a comment

Comments

No Comments Yet!

You can be the one to start a conversation.

Add a Comment

Your data will be safe! Your e-mail address will not be published. Other data you enter will not be shared with any third party.
All * fields are required.