மாரடைப்பு என்பது ஒரு தீவிரமான மருத்துவ நிலையாகும். இது உங்கள் இதயத்தின் ஒரு பகுதிக்கு ரத்த விநியோகம் தடைபடும்போது ஏற்படும். பின்னர் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உங்கள் இதயத் தசை சேதமடைகிறது. மாரடைப்பிற்கான ஆங்கிலப் பெயர் Heart Attack.
மாரடைப்பு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதை அறிந்திருப்பது அவசியம்.
மாரடைப்பு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக 108 என்ற அவசரகால எண்ணுக்கு அழைத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கவும்.
ஆம்புலன்ஸ் வரும் வரை, நோயாளி அமைதியாக இருக்க வேண்டும். நோயாளிக்கு ஏற்கனவே இருக்கும் உடல்நல பிரச்னைகள், மருந்துகள் எடுத்துக் கொள்வது பற்றிய விவரங்களை ஆம்புலன்ஸ் பணியாளர்களிடம் தெளிவுபடுத்துங்கள்.
நோயாளிக்கு மருந்துகள் ஏதும் கொடுக்க வேண்டாம். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்துகளையும் கொடுப்பது ஆபத்தானது.
நோயாளி திடீரென்று மயக்கமடைந்து சுவாசம் நின்றால், சி.பி.ஆர் (CPR) முதலுதவி அளிக்க முயற்சிக்கலாம். CPR அளிக்கும் பயிற்சி இல்லை என்றால், நோயாளி மீண்டும் சுவாசிக்கும் வரை காத்திருந்து மருத்துவ உதவிக்காக காத்திருங்கள்.
மருத்துவமனையில் மருத்துவர்கள் நோயாளியின் நிலைமை பரிசோதனை செய்து, தேவையான சிகிச்சை அளிப்பார்கள்.
மாரடைப்பு ஏற்பட்டால் உடனடி கவனிப்பு அவசியம் என்றாலும், ஏற்கனவே எடுத்துக்கொண்ட மருந்துகள் பற்றிய தகவல்கள் மருத்துவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க உதவும். எனவே, எப்போதும் உங்கள் மருந்து பட்டியலை வைத்திருங்கள், மருத்துவரிடம் தெளிவாக தகவல் தெரிவிப்பதன் மூலம் சிறந்த சிகிச்சை பெறுவதற்கான வாய்ப்பை அதிகரித்துக்கொள்ளுங்கள்.
கொழுப்பு குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருக்கும் உணவுகளை தேர்ந்தெடுங்கள். பழங்கள், காய்கறிகள், முழுத் தானியங்கள், மீன் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். உப்பு, சீனி, டிரான்ஸ் கொழுப்பு போன்றவற்றின் அளவைக் குறைக்கவும்.
வாரத்துக்குக் குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான தீவிரம் கொண்ட உடற்பயிற்சி அல்லது 75 நிமிடங்கள் கடுமையான உடற்பயிற்சி அவசியம். நடைப்பயிற்சி, ஓட்டம், நீச்சல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
அதிகப்படியான எடை இதய நோய்களுக்கான அபாயத்தை அதிகரிக்கிறது. உங்கள் BMI ஐ பராமரிக்க வேண்டும்.
புகைப்பிடித்தல் இதய நோய்களுக்கான மிகப்பெரிய அபாயக் காரணி ஆகும். புகைப்பழக்கத்தை முற்றிலுமாக கைவிடுவது இதய ஆரோக்கியத்திற்கு அவசியம்.
மன அழுத்தம் இதய ஆரோக்கியத்தை பாதிக்கும். யோகா, தியானம் போன்ற மcன அழுத்தைக் குறைக்கும் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
குறைந்தது வருடத்திற்கு ஒரு முறை ரத்த அழுத்தம், கொழுப்பு போன்ற பரிசோதனைகளை செய்து கொள்வது அவசியம். இதன் மூலம் இதய நோய்களின் ஆரம்ப அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை பெறலாம்.
இந்த நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மாரடைப்பு அபாயத்தைக் குறைத்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம்.
மாரடைப்பு உள்பட இதய நோய்கள் தவிர்க்கக்கூடிய பிரச்னைகளே. சில வாழ்க்கைமுறை மாற்றங்கள் மற்றும் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கலாம்.
Dr. M. Rajendran, Consultant – Interventional Cardiologist, Kauvery Hospital Salem
Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.
Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801
Comment:*
Nickname*
Save my name, email, and website in this browser for the next time I comment.