வெஜ் மோமோஸ்

வெஜ் மோமோஸ்
March 28 09:50 2023 by admin Print This Article

என்னென்ன தேவை

  1. அரிசி மாவு 100 கிராம்
  2. கேரட் 25 கிராம்
  3. பீன்ஸ் 25 கிராம்
  4. முட்டைக்கோஸ் 25 கிராம்
  5. வெங்காயம் 20 கிராம்
  6. ஸ்வீட் கார்ன் 20 கிராம்
  7. சில்லி ஃப்ளேக்ஸ் தாளிக்க
  8. எண்ணெய் தாளிக்க

எப்படிச் செய்வது?

மாவு தயாரிப்பு  

  1. அரிசி மாவை இரண்டு நிமிடம் குறைந்த தீயில் வறுக்கவும்.
  2. ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்துக் கிளறி, கெட்டியான மாவாக வரும் வரை குறைந்த தீயில் கலந்து, தீயை அணைத்து, மூடியால் மூடி 5 நிமிடம் வைக்கவும்.
  3. 5 நிமிடங்களுக்குப் பிறகு, மூடியை அகற்றி, மாவை மஸ்லின் துணியால் மூடவும்.
  4. மாவை 10 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பிறகு அந்த மாவிலிருந்து உருண்டைகளை உருவாக்கவும்.

ஸ்டஃப்பிங் தயாரிப்பு  

  1. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு தாளித்து, அதில் அனைத்துக் காய்கறிகளையும் ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து, நன்கு வதக்கி, சிறிது மிளகாய்த் தூள் சேர்த்து, நன்றாக வதக்கி, தீயை அணைத்து, தனியாக வைக்கவும்.
  2. மாவிலிருந்து ஒரு சிறிய உருண்டையை எடுத்து உருட்டி, ரோலிங் பான் உதவியுடன் தட்டையாக்கி, ஸ்டஃபிங்கை மையத்தில் வைத்து மோமோஸ் வடிவில் மடிக்கவும்.
  3. மோமோஸை ஒரு ஸ்டீமரில் வைத்து சுமார் 10 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும்.
  4. ஸ்டீமரில் இருந்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.

என்னென்ன சத்துக்கள்

கலோரிகள்: 484.9 கிலோ கலோரி

புரதம்: 9.6 கிராம்

கொழுப்பு: 6.12 கிராம்

கார்போஹைட்ரேட்: 86 கிராம்

சோடியம்: 20.2 மி.கி

பொட்டாசியம்: 352 மி.கி.

பாஸ்பரஸ்: 157 மி.கி

பலன் என்ன

நுண்ணூட்டச் சத்து நிறைந்த இந்த உணவு சிற்றுண்டிக்கு ஏற்றது. சோடியம், பொட்டாசியம் குறைவாகவெ உள்ளதால் சிறுநீரக நோயாளிகளுக்கு (அனைத்து நிலைகளுக்கும்) ஏற்றது.

  Categories:
write a comment

Comments

No Comments Yet!

You can be the one to start a conversation.

Add a Comment

Your data will be safe! Your e-mail address will not be published. Other data you enter will not be shared with any third party.
All * fields are required.